வாக்குசாவடி நிலைய அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம்

61பார்த்தது
வாக்குசாவடி நிலைய அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம்
தஞ்சாவூர் மக்களவை தேர்தல் திருவையாறு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு முகாமில் கலந்து கொள்ளாத 150 வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் தாலுக்கா அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுதாராணி தலைமையில் நடைபெற்றது. தாசில்தார் கஜேந்திரன் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார். பயிற்சி முகாமில் திருவையாறு தாசில்தார் தர்மராஜ், பூதலூர் தாசில்தார் மரியஜோசப், துணை தாசில்தார்கள் அகத்தியன், செல்வம் மற்றும் 150 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதே போல் 26 மண்டல அலுவலர்களுக்கு ஒட்டு மெஷின் இயக்குதல் மற்றும் பழுதுகளை சரி செய்வது உள்ளிட்ட பயற்சி முகாம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி