தூர்வாரும் பணிகளை உடனே நடத்த விவசாயிகள் கோரிக்கை

84பார்த்தது
தூர்வாரும் பணிகளை உடனே நடத்த விவசாயிகள் கோரிக்கை
கும்பகோணம் அருகே காவேரி ஆற்றின் துணை ஆறாக போற்றப்படும் பழவாறு வாய்க்கால் பல்வேறு கிராமங்களுக்கு சென்று விவசாய பணிகளுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த நிலையில் வருகிற ஜூன் 15க்கு மேல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு அதன் மூலம் கல்லணையிலிருந்து விவசாயப் பணிகளுக்கு தண்ணீர் திறக்கும் பணிகள் அதிதீவிரமாக நடந்து வருகிறது. மேலும் விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை அதிவிரைவில் துவங்குவதற்காக தண்ணீர் திறந்து விடும் பணிகள் மிக துரிதமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பழவாற்றில் ஆகாய தாமரைகள் மற்றும் ஊர் குப்பைகள் கொட்டி ஆற்றின் கடைமடை பகுதி வரை தண்ணீர் திறந்து விட்டால் செல்வது மிகவும் கடினம். மேலும் நாகக்குடி, சுவாமிமலை, ஆதனூர், இன்னம்பூர், ஏராகரம், உத்திரை, கோவிலாசேரி, அணைக்குடி, திருவிடைமருதூர் ஆகிய பகுதிகளில் விவசாய பணிகள் சிறப்பாக செய்வதற்கு பழவாற்றின் தண்ணீரை நம்பி விவசாயிகள் இருந்து வருகிறார்கள். ஆகவே அரசு மற்றும் பொதுப்பணித்துறையினர் ஆற்றினை தூர் வாரும் பணியினை உடனே துவக்கி விவசாயம் செழிப்பாக நடைபெறுவதற்கு உதவிடுமாறு விவசாய பெருமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் பழவாற்றின் தூர் வாரும் பணியை உடனே செய்வதற்கு நடவடிக்கை எடுப்பாரா?

தொடர்புடைய செய்தி