ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் அன்னதானம்

71பார்த்தது
ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் அன்னதானம்
திருவையாறில் கலைஞரின் 101-வது பிறந்த நாள் விழா ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் அன்னதானம்

திருவையாறு அடுத்த கடுவெளி ஸ்ரீவெங்கடேஸ்வரா ஆதரவற்றோர் முதியோர் மாணவர்கள் இல்லத்தில் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் 101-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவில் ஒன்றியக்குழுத் தலைவர் அரசாபகரன் தலைமையில் மாவட்ட இளைஞரணி செயலாளர் முகில்வேந்தன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்டபாணி, ஒன்றிய கவுன்சிலர் ஜெயசீலன், ஊராட்சிமன்றத் தலைவர் ஆரவல்லிராஜாராம், ஒன்றிய பிரதிநிதி மாணிக்கம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிராஜ், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் ராஜ்குமார், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு அனைவருக்கும் அறுசுவையுடன் கூடிய மதிய உணவு வழங்கினார்கள். முடிவில் இல்ல செயலாளர் சங்கர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி