கூத்தனூர் அருகே தென்கோவனூரைச் சேர்ந்த தாமரைக்கனி, ரேகா தம்பதியரின் இரண்டரை வயது மகள் மகாலட்சுமி. இன்று காலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். அவரது தாய் ரேகா வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பின்னர் வீட்டு வாசலில் வந்து பார்த்தபோது சிறுமி மகாலட்சுமி இல்லாததால் பல்வேறு இடங்களிலும் தேடினர். வீட்டின் எதிரே செல்லும் வாய்க்காலில் பார்த்தபோது சிறுமி மகாலட்சுமி நீரில் மிதந்துள்ளார்.
உடனடியாக சிறுமி மீட்கப்பட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கூத்தாநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாய்க்கால் நீரில் மூழ்கி சிறுமி உயிர் இழந்த சம்பவம் தென்கோவனூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.