தஞ்சாவூர்: கஞ்சா விற்ற 4 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை
தஞ்சாவூரில் கஞ்சா விற்ற 4 பேருக்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தஞ்சாவூர் ராஜகோரி சுடுகாடு அருகே மார்ச் 15 ஆம் தேதி வடக்கு வாசல் பகுதியைச் சேர்ந்த பாலகண்பதி (23), வசந்தகுமார் (26), சூரியகுமார் (24), காந்திபுரத்தைச் சேர்ந்த கவிப்பிரியன் (21) ஆகியோர் 1. 1 கிலோ கஞ்சாவை வைத்து விற்றபோது ரோந்து பணி மேற்கொண்ட மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜ்கமல் உள்ளிட்டோர் 4 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பாக ஆய்வாளர் சோமசுந்தரம் மேல் விசாரணை மேற்கொண்டு தஞ்சாவூர் கூடுதல் அமர்வு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலகணபதி, வசந்தகுமார். சூரியகுமார், கவிப்பிரியன் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.