தஞ்சாவூர் - Thanjavur City

தஞ்சை: தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் மகா குபேர யாகம்

தஞ்சை: தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் மகா குபேர யாகம்

ஐப்பசி மாத அமாவாசையையொட்டி தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரையில் உள்ள தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் மகா குபேர யாகம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. குபேரன் இலங்கையை ஆட்சி செய்து வந்தபோது தனது செல்வங்களை ராவணனிடம் இழந்ததாவும், பின்னர் அதனை மீட்க பல்வேறு சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டதாகவும், அப்போது தஞ்சபுரீஸ்வரர் கோயிலுக்கு வந்து வழிபட்டதன் மூலம் சிவனின் அருளால் இழந்த செல்வங்களை ஐப்பசி மாதம் அமாவாசை நாளில் திரும்பப் பெற்றதாகவும் பக்தர்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. இக்கோயிலில் குபேரன் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு மாதந்தோறும் அமாவாசையன்று யாகம் நடைபெறும். இதில், ஐப்பசி அமாவாசையான தீபாவளியன்று நடைபெறும் மகா குபேர யாகம் மிகவும் பிரசித்தி பெற்றது. நிகழாண்டு ஐப்பசி மாத அமாவாசை தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான வெள்ளிக்கிழமை வந்தது. இதையொட்டி, தஞ்சபுரீசுவரர் கோயிலில் குபேர யாகம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த யாகத்தில் ஹோம பொருள்கள், பழங்கள், வாசனை திரவியங்கள் போன்றவை போடப்பட்டன. முன்னதாக, கோயிலில் உள்ள குபேரனுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள் போன்ற 11 வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. பின்னர், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా