தஞ்சை: சரஸ்வதி மஹால் நூலக இயக்குனர் பணியிடம் நிரப்பக்கோரி வழக்கு

85பார்த்தது
தஞ்சை: சரஸ்வதி மஹால் நூலக இயக்குனர் பணியிடம் நிரப்பக்கோரி வழக்கு
தஞ்சை மாவட்டம் பூதலூர் வழக்குரைஞர் ஜீவகுமார், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகத்தில் 70 ஆயிரம் கையெழுத்து பிரதிகள் உள்ளன. இந்த நூலகத்தின் முக்கியத்துவம் ககுதி தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. நூலகத்தின் இயக்குனர் மற்றும் நிர்வாக அலுவலர் பணியிடம் இப்போது காலியாக உள்ளது. ஆட்சியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் கூடுதல் பொறுப்புகளாக முறையே இயக்குநர். நிர்வாக அலுவலர் பணியிடங்களை
கவனிக்கின்றனர்.

பல்வேறு மொழிபெயர்ப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. நூலகத்தில் இருக்கும் 22 சிசிடிவி கேமராக்களும் இயங்கவில்லை. பணியிடங்கள் நிரப்பப்பட்டால் மட்டுமே நூலகத்தை பராமரிக்க எதுவாக அமையும். ஆகவே தஞ்சை சாஸ்வதி மஹால் நுாலகத்தின் இயக்குனர், நிர்வாக அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இம்மனு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வு ஆகியோர் கொண்ட பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசின் கலாசாரத்துறை, மனித வள மேம்பாட்டுதுறை. தமிழக அரசின் பள்ளிக்கல்வி தொல்லியல்துறை, மற்றும் தொழில்நுட்பதுறை ஆகியவற்றின் செயலர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 17க்கு ஒத்தி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி