திருட்டு வழக்கு இளைஞர் கைது

58பார்த்தது
திருட்டு வழக்கு இளைஞர் கைது
தஞ்சாவூர் அருகே பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

வல்லம் அருகே திருக்கானூர்பட்டி கம்மாளர் தெருவில் ஜூலை 3-ஆம் தேதி நிகழ்ந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வல்லம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ், தனிப்படை உதவி ஆய்வாளர் விஜய் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சேர்ந்த தவமணி மகன் வினோத்குமாரை (23) ஞாயிற்றுக் கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 9 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இவர் மீது மதுரை, தாம்பரம், பள்ளிக்கரணை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.

தொடர்புடைய செய்தி