தஞ்சை: ஆளுநர் வரைமுறைகளை மீறியதால் உச்சநீதிமன்றம் சென்றோம்

77பார்த்தது
தஞ்சை: ஆளுநர் வரைமுறைகளை மீறியதால் உச்சநீதிமன்றம் சென்றோம்
தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் நாள் விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் கோவை. செழியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: இந்தியாவின் வளர்ச்சிக்கு எந்தவொரு பிரச்சினையை முன்னிறுத்தினாலும், அதற்கு தமிழகம்தான் முன்னின்று அதற்கான மணியோசையை எழுப்பியுள்ளது. 

மாநில உரிமை, மாநில சுயாட்சி என்றாலே தமிழ்நாடுதான் மற்ற மாநிலங்களுக்கு நினைவுக்கு வரும். மாநில ஆளுநருக்கு சில வரைமுறைகள், சில அளவுகோல்கள், சில நெறிமுறைகள் உண்டு. அதை மீறுகிற நேரத்தில்தான் நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடுகிற நிலை ஏற்பட்டது. தமிழக ஆளுநருக்கு கொடுக்கப்பட்டுள்ள நெறிமுறைகள், வரைமுறைகள் மற்ற மாநிலங்களுக்கு பொருந்தக்கூடிய வகையில் உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டிய ஒரே ஜனநாயக போராளி தமிழ்நாடு முதல்வர் மட்டுமே. 

இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.96 கோடி மதிப்பில் வாகனங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்துக்கு 200 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட வண்டிகள் வழங்குவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இவ்விழாவில் 100 பேருக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள 100 வண்டிகள் விரைவில் வழங்கப்படும்" என்றார் அமைச்சர்.

தொடர்புடைய செய்தி