கோமாரி நோய்க்கு தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு தஞ்சை ஆட்சியர்

53பார்த்தது
கோமாரி நோய்க்கு தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு தஞ்சை ஆட்சியர்
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் அருகே, திருமலைசமுத்திரம் ஊராட்சியில் கால்நடைப் பராமரிப்பு துறை சார்பில், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியினை, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் 
துரை. சந்திரசேகரன் முன்னிலையில் 
மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து திங்கள்கிழமை துவக்கி வைத்தார்.

கோமாரி நோய் தடுப்பு முகாமில் ஏராளமான கால்நடைகளுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டது.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது.

கால்நடைகளில் ஏற்படும் கோமாரி நோய் ஒருவகை வைரஸ் நச்சுக் கிருமியால் ஏற்படும் கொடிய நோயாகும். இந்த வகை நோய்க்கு சிகிச்சை கிடையாது. தடுப்பூசி மட்டுமே ஒரே மருந்தாகும்.
இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவதுடன், சினைப்பிடிப்பதில் தாமதம் ஏற்படும். மேலும் இளைப்பு ஏற்படுவதால் எருதுகளில் வேலைத்திறன் குறைகிறது.
இளங்கன்றுகளுக்கு இந்நோய் ஏற்படின் 100 விழுக்காடு இறந்து விடும். ஆகையால் இந்நோய் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி அளிப்பதே சிறந்ததாகும்.
என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் மரு. கார்த்திகேயன், துணை இயக்குநர் மற்றும் தீவன அபிவிருத்தி இனப்பெருக்கம் மரு. சுப்பையன், உதவி இயக்குநர் (நோய் புலனாய்வு பிரிவு) மரு. தெய்வவிருதம், உதவி இயக்குநர் மரு. சரவணன், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி