தஞ்சாவூரில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் கேட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் ஜெபமாலைப்புரம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு பொருளாளர் ராமசாமி ஏஐடியுசி செயலாளர் தமிழ் மன்னன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் இதுவரை போனஸ் வழங்காததை கண்டித்தும், நவம்பர் 1ஆம் தேதி வழங்க வேண்டிய சம்பளத்தை புதிய அகவிலைப்படியுடன் தீபாவளிக்கு முன்னதாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி முழக்கங்களை எழுப்பினர்.
போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் துரை. மதிவாணன், ஏஐடியுசி மாவட்ட தலைவர் சேவையா, சிஐடியு தலைவர் காரல் மார்க்ஸ், கரந்தை புறநகர் கிளை தலைவர் முருகானந்தம், நிர்வாகி ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.