தஞ்சாவூரில் பயிற்சி மருத்துவர் உயிரிழப்பு

4198பார்த்தது
தஞ்சாவூரில் பயிற்சி மருத்துவர் உயிரிழப்பு
தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு பணியில் இருந்த மருத்துவர் உயிரிழந்தார். கும்பகோணம் அருகே அம்மாசத்திரம் நேரு நகரைச் சேர்ந்தவர் தமிழ்மணி மகன் சூர்யா என்கிற தமிழழகன் (27). இவர் தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இவர் சனிக்கிழமை பணியில் இருந்தபோது, திடீரென மயக்கமடைந்த நிலையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், தமிழழகன் வழியிலேயே உயிரிழந்தார். இதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது குறித்து தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தினர் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி