தஞ்சை: நெல் கொள்முதலை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்

59பார்த்தது
தஞ்சை: நெல் கொள்முதலை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்
நெல் கொள்முதலை தனியாருக்கு விடக்கூடாது என்று, தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.  
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்  என். வி. கண்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.   தஞ்சை மாவட்ட தலைவர் பி. செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் பழனிஅய்யா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.  
ஆர்ப்பாட்டத்தில் கரும்பு சர்க்கரை ஆலை விவசாயிகள் சங்க செயலாளர் கோவிந்தராஜ், திருவையாறு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் எம். ராம், விதொச மாவட்ட தலைவர் பிரதீப் ராஜ்குமார், விவசாய சங்க நிர்வாகிகள் உதயகுமார், பாலு,   கருப்பையா, சிபிஎம் மாநகர செயலாளர்     எம். வடிவேலன், சிபிஎம் நிர்வாகிகள் கே. அபிமன்னன், என். சரவணன், என். குருசாமி மற்றும் ரவி, ராஜா, பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி