தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் பாப்பாநாடு அருகே சோழகன்குடிகாடு தியில் வசிக்கும் கவிதா கடந்த 22. 03. 2022 அதிகாலை வீட்டினுள் தூங்கியபோது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் அவர் அணிந்திருந்த 8 கிராம் தாலியை பறித்துச் சென்றார்.
புகாரின்பேரில் பாப்பாநாடு காவல் ஆய்வாளர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை சேர்ந்த பழனி(எ)பழனியாண்டி (62) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து ஓரத்ததாடு ஓரத்தநாடு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை விசாரித்த நீதிபதி (பொ) முகமது கனி பழனியாண்டிக்கு 2 ஆண்டுகள் மாதம் சிறை தண்டணையும், ரூ. 500 அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.