கோடைகால தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம்

72பார்த்தது
கோடைகால தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம்
தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணி துறை மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து கோடைகால தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் மீனாட்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. முகாமில் மாவட்ட தீயணைப்பு பணித் துறை தலைவர் குமார் தலைமை வகித்து தீத்தடுப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார்.

தொடர்ந்து தஞ்சா வூர் மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் முருகேசன் மற்றும் குழுவினர்களால் பணியாளர்களுக்கு ஆதார தீத்தடுப்பு குறித்தும், தீயணைப்பான்களை கையாளுவது குறித்தும், சமையல் எரிவாயு தீத்தடுப்பு குறித்த செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் சரவணவேல், பொது மேலாளர் டாக்டர் பால முருகன், மனிதவள மேம்பாட்டு துறை மேலாளர் செல்வபாண்டி கலந்து கொண்டனர். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி