கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்காததாலும், மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக இருந்ததாலும் டெல்டா பாசத்திற்காக ஜூலை 12ஆம் தேதி திறக்க வேண்டிய அவை திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் குருவை சாகுபடி செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.
இதனால் பல்வேறு போராட்டங்கள் நடத்தின இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த பெரும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கர்நாடகா மாநிலத்திலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. தற்போது கிடைக்கப்பெற்ற இந்த உபரி நீரை கடலுக்கு விட்டு விரயமாக்காமல் சம்பா சாகுபடிக்கு உபயோகப்படும் வகையில் நீரை தேக்கி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.