தஞ்சாவூர் அருகே ஈச்சங்கோட்டையில், கோத்ரெஜ் குழுமம் சார்பில், பாமாயில் எண்ணெய் பனை விவசாயிகளுக்கான தீர்வு மையம் தொடங்கப்பட்டது.
இந்த தீர்வு மையத்தில், விவசாயிகளுக்கு தேவையான பாமாயில் எண்ணெய் பனை செடிகள், அதற்கான உரங்கள், பராமரிப்பு கருவிகள், பின்னர் எண்ணெய் பனை விதையை கொள்முதல் செய்யவும் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
இதனை துவக்கி வைத்து தமிழக தொழில்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா பேசியதாவது:
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தேங்காய் மற்றும் கடலை எண்ணெயை ரேஷன் கடைகளில் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
டெல்டாவில் தண்ணீர் பிரச்சனை அதிகளவில் உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், குறைவான தண்ணீரை பயன்படுத்தி சாகுபடி செய்யும் பயிர்களை நோக்கி விவசாயிகள் செல்ல வேண்டும். விவசாயிகளுக்கு வருமானமும் பெருகும்" இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், தஞ்சாவூர் எம். பி. , முரசொலி, கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் சவுதா நியோகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.