தபால்துறை ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்க மாநாடு

66பார்த்தது
தபால்துறை ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்க மாநாடு
தஞ்சை கோட்ட தபால்துறை ஆர்எம்எஸ்
ஓய்வூதியர் சங்க 5வது கோட்ட மாநாடு தபால்துறை அலுவலகத்தில் நடந்தது. கோட்ட தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். செயலாளர் சிவரத்தினம், பொருளாளர் சண்முகம் ஆகியோர் அறிக்கை வாசித்தனர். கோவிந்தராஜன் வரவேற்றார். அகில இந்திய தலைவர் ராகவேந்திரன் ஆகியோர் பேசினார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் மூத்த குடிமக்களுக்கு ரயில்வேயில் முன்பு இருந்த சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும். 65, 70, 75 ஆண்டுகளில் அடிப்படை ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ருத்ராபதி, சைவராஜ். பஞ்சநாதன், சாகுல் அமீது, முத்துக்குமாரசாமி, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார் நிறைவாக ஆசைத்தம்பி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி