வல்லத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதி பெயிண்டர் பலி

81பார்த்தது
வல்லத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதி பெயிண்டர் பலி
தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பெரியார் நகரை சேர்ந்தவர்கள் விஜயன் (வயது 56), ஜேம்ஸ் (46), பவுல்ராஜ் (46). இவர்கள் 3 பேரும் பெயிண்டராக வேலை பார்த்து வந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை விஜயன், ஜேம்ஸ், பவுல்ராஜ் ஆகியோர் வேலைக்கு சென்றுள்ளனர். மாலை வேலை முடிந்து 3 பேரும்
ஒரே மோட்டார் சைக்கிளில் வீடுதிரும்பி கொண்டிருந்தனர்.

வல்லம் நோக்கி வந்த போது ஒரத்தநாட்டில் இருந்து அன்பரசன் என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத
விதமாக 3 பேர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் விஜயன், ஜேம்ஸ், பவுல்ராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு
சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு விஜயன் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வல்லம் காவல் உதவி ஆய்வாளர் ஸ்ரீதரன் மற்றும் காவல்துறையினர்
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி