பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த
வேண்டும் என்பது உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 20-ஆம் தேதி மாவட்டக்கல்வி அலுவலர் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்த தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தலைவர் சேதுசெல்வம் தலைமை வகித்தார். நிறுவனர் தலைவர் மாயவன் முன்னிலை வகித்தார்.
பொதுச் செயலாளர் ஜெயக்குமார் அறிக்கையை சமர்ப்பித்தார். பொருளாளர் விஜயசாரதி நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார்.
கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என் பது உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அனைத்து மாவட்டங்களிலும் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் முன்பு ஆகஸ்ட் 20-இல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. முன்னதாக, இதயராஜா வரவேற்றார்.