தஞ்சாவூர் கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீட்டுக் குழு வருகை

58பார்த்தது
தஞ்சாவூர் கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீட்டுக் குழு வருகை
தஞ்சாவூரில் அமைந்துள்ள குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் தன்னாட்சிக் கல்லூரி, 1966 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இக்கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவிகள் வந்து தங்கி உயர்கல்வி பயிலும் நிறுவனமாகும். இக்கல்லூரியில் 14 துறைகளில் இளநிலைப் பட்ட வகுப்புகளும், 13 துறைகளில் முதுநிலைப்பட்ட வகுப்புகளும், 9 துறைகளில் ஆய்வு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. 4,295 மாணவிகள் இங்கு கல்வி பயில்கின்றனர். கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் நான்கு முறை இக்கல்லூரிக்குத் தேசிய தர மதிப்பீட்டுக் குழு ஆய்வு செய்து சான்றளித்துள்ளது. 

இந்நிலையில் பிப்ரவரி மாதம் 6, 7 தேதிகளில் ஐந்தாவது முறையாக தரமதிப்பீடு மேற்கொள்ள தேசிய தர மதிப்பீட்டு ஆய்வுக் குழுவினர் வருகை தந்தனர். அதன் மூலம் தமிழக அரசுக் கல்லூரிகளிலேயே ஐந்தாவது முறையாக, இந்த தர மதிப்பீட்டுக்குச் செல்லும் முதல் கல்லூரி என்ற பெருமையை இக்கல்லூரி பெறுகிறது. இதன் பொருட்டு இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி முதல்வர் அ. ஜான் பீட்டர் தலைமையில், உள் தர உறுதிக் குழுத் தலைவர் க. பானுகுமார் மற்றும் உறுப்பினர்கள், தேர்வு நெறியாளர் தெ. மலர்விழி மற்றும் துறைத் தலைவர்களும் பேராசிரியர்களும் மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி