திருச்சி: தமிழக முதல்வர் காணொளி காட்சியில் ஜெயலலிதா இபிஎஸ் புகைப்படம்

71பார்த்தது
திருச்சி, இபி சாலையில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். காலை 10 மணிக்கு காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

இதனால் பள்ளி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் அமர வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் முதல்வர் காணொளிக் காட்சி மூலமாக இந்தப் பள்ளிக் கட்டிடத்தை திறக்க இரண்டரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டதால் மாணவிகள் அனைவரும் சோர்ந்த நிலையில் அமர்ந்திருந்தனர். சற்று நேரத்திற்கு முன்பாக காணொளிக் காட்சி மூலமாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிதாகக் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சமூக வலைதளமான DIPR-ல் இந்த நிகழ்வை நேரலைக் காட்சியாக வழங்கினார். 

அப்போது நிகழ்ச்சி நிறைவுற்ற பிறகு அந்த நேரலைக் காட்சியில் அதிமுக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மற்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புகைப்படம் வந்ததால் அதிகாரிகள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. குறிப்பாக மறைந்த முதல்வர் மாணவ மாணவிகளுக்குக் கொடுக்கப்பட்ட மடிக்கணினி திமுக நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் திமுக அரசு தற்போது படிக்கும் மாணவ மாணவிகளுக்கு லேப்டாப்புக்குப் பதிலாக டேப் கொடுக்கப்படும் என அறிவித்து இதுவரை கொடுக
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி