தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய அஞ்சல் கோட்டங்கள் சார்பில் மாவட்ட அளவிலான களஞ்சியம் 79 டிகிரி இ என்ற அஞ்சல் தலை கண்காட்சி நேற்று(அக்.9) தொடங்கியது. தொடக்க விழாவில் தமிழ் பல்கலைக்கழகம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார், கடல் பசு பாதுகாப்பகம் ஆகியன பொறிக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் உறைகளை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட சட்டப்பேரவை உறுப்பினர்கள் நீலமேகம் (தஞ்சாவூர்), அண்ணாதுரை (பட்டுக்கோட்டை) மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி, மத்திய மண்டல அஞ்சல் தலைவர் நிர்மலா தேவி, பல்கலைக்கழக பதிவாளர் தியாகராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்த கண்காட்சி இரண்டாவது நாளாக இன்றுடன் நிறைவு பெற்றது. இதில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் ஆதார் திருத்தம் அரங்குகளும், அஞ்சல் கணக்கு தொடங்குவதற்கான அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தது.