நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகியுள்ளார். சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது, “கரையான் கூட்டத்தோடு இருந்து துரோகி ஆவதைவிட, கிளையாக உடைந்து எதிரியாவதே மேல்” என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, நாதக-வில் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் விலகி வருகின்றனர். நேற்றைய தினம் நாதக மாநில பெண்கள் அணி ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் விலகியுள்ளதாக தகவல் வெளியானது.