ஜூன் 11, 18, 25-இல் அடையாள அட்டை வழங்கும் முகாம்

84பார்த்தது
ஜூன் 11, 18, 25-இல் அடையாள அட்டை வழங்கும் முகாம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்
திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஜூன் 11, 18, 25 ஆம் தேதிக ளில் நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப் தெரிவித்திருப்பது மாற்றுத்
திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்காக தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டையில் கோட்ட அளவில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்டமாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் ஜூன் 11 ஆம் தேதியும், கும்பகோணம் பேருந்து நிலையம் அருகேயுள்ள கே. எம். எஸ். எஸ் வளாகத்தில் ஜூன் 18 ஆம் தேதியும், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள கிராம சேவை கட்டடத்தில் ஜூன் 25 ஆம் தேதியும் மாற்றுத்
திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது. இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் இம்முகாமில்
ஆவணங்களுடன் மாற்றுத்
திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்துப்
பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி