தஞ்சையில் இருவர் மீது பாய்ந்தது குண்டாஸ்

55பார்த்தது
தஞ்சையில் இருவர் மீது பாய்ந்தது குண்டாஸ்
தஞ்சாவூர் நகரம், மானோஜிப்பட்டி தெற்கு, கன்னியம்மாள் நகரில் வசிக்கும், சுப்பிரமணியன் என்பவரின் மகன் சேட்டை மணி என்ற மணிகண்டன் (வயது 29) மற்றும் தஞ்சாவூர் வடக்கு வாசல், மேல லைன் என்ற முகவரியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவரின் மகன் டக்ளஸ் மணி என்ற மணிகண்டன் (வயது 33) ஆகிய இருவரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் பரிந்துரையின் பேரிலும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர் 
பா. ரமேஷ் தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணம் மற்றும் இதர ஆவணங்களின் அடிப்படையிலும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்திட, தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட நடுவர் தீபக் ஜேக்கப் உத்தரவின் பேரில், இருவரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி