தஞ்சையில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

74பார்த்தது
தஞ்சையில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூரில் நம்பர் 1 வல்லம் சாலையில் உள்ள
மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின்
செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (ஆக. 1) முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து செயற் பொறியாளர் எம். மணிவண்ணன் (பொ) மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொ) பி. விமலா நடத்தவுள்ள இந்தக் கூட்டத்தில் வல்லம், மின்நகர், செங்கிப்பட்டி, வீரமரசன்பேட்டை கள்ளப்பெரம்பூர், திருக்கானூர்பட்டி, வடக்கு தஞ்சாவூர், குருங்குளம், மருங்குளம், மெலட்டூர் திருவையாறு புறநகர், திருவையாறு நகரம் திருக்காட்டுப்பள்ளி நகரம். திருக்காட்டுப்பள்ளி புறநகர், நடுக்காவேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர் நேரில் வந்து தெரிவிக்கலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி