பட்ஜெட் எதிரொலி.. தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

72பார்த்தது
பட்ஜெட் எதிரொலி.. தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, சிபிஎம் கட்சி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது. திருச்சி மணப்பாறையில் நேற்று (பிப்., 02) நடைபெற்ற கட்சி நிதி அளிப்பு கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, மத்திய பட்ஜெட்டில் தமிழகம், கேரளா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகிறது. பட்ஜெட்டை கண்டித்து நாளை (பிப்., 4) தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி