தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் அண்ணா என்று அழைக்கப்படும் சி.என்.அண்ணாதுரை. மாநிலத்தின் முன்னாள் முதல்வரான இவரின் நினைவு தினம் இன்று (பிப். 03) அனுசரிக்கப்படுகிறது. திராவிட முன்னேற்ற கழகம் என்ற தனிக் கட்சியை தொடங்கிய அண்ணா இந்திய அரசியல் தளத்தில் 'மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி' என்பதை முன்வைத்தவர். பிரதான ஆளுமையாக திகழ்ந்த இவர், 1969 பிப். 3-ம் தேதி காலமானார்.