அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகியுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், இந்த வழக்குகளை வேறு நீதிபதி முன்பு பட்டியலிடும் வகையில், தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளார்.