தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஒளவை மழலையர் தொடக்கப் பள்ளியில் திருமுறை இசைப் பயிலரங்கம் நடைபெற்றது.
பள்ளித் தாளாளர் கண்ணகி கலைவேந்தன் தலைமை வகித்தார். பயிலரங்கை திருவண்ணாமலை திருமூலர் ஆசிரமத் தலைவர் சுவாமி விஜயானந்தா சரஸ்வதி அடிகளார் தொடங்கி வைத்து வாழ்த்தினார். மாணவர்களுக்கு இசை ஆசிரியை பிரம்ம வித்யா, கௌரி ஆகியோர் திரு முறை இசைப் பயிற்சி அளித்தனர்.
பின்னர் சுவாமி விஜயானந்தா சரஸ்வதி அடிகளார், சுவாமினி திவ்யானந்தா சரஸ்வதி அடிகளார் ஆகியோருக்கு தமிழய்யா கல்விக் கழக நிறுவனர் மு. கலைவேந்தன் திருப்பணிச் செம்மல் விருது வழங்கினார். திருச்சி ராதா நீலகண்டன், துபை நர்மதா, ராஜேஸ்வரி கண்ணபிரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளித்தலைமையாசிரியை கோ. கோகிலா வரவேற்றார். உதவித் தலைமையாசிரியை இரா. தனலெட்சுமி நன்றி கூறினார்.