ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் எதிரே திமுகவினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் முழுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்டவற்றைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மத்திய மாவட்டச் செயலரும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரசொலி, தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி. கே. ஜி. நீலமேகம், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள்
எம். ராமச்சந்திரன், து. செல்வம், கே. டி. மகேஷ் கிருஷ்ணசாமி, மாவட்ட அவைத் தலைவர்
சி. இறைவன், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.