ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

75பார்த்தது
ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசைக் கண்டித்து தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான எவ்வித திட்டமும் அறிவிக்கவில்லை. பலவேறு திட்டங்கள்
இன்னும் செயல்படுத்தப் படாமல் உள்ளது. நலத்திட்ட அறிவிப்பும் இல்லை. எனவே ஒன்றிய அரசு பட்ஜெட்டில் பாகுபாடு காட்டுவதை கண்டித்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர மாவட்டது தலைவர் பி. ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் ஒன்றிய அரசைக்
கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் முன்னாள் தலைவர் நாஞ்சில் வரதராஜன், மாவட்ட துணைத் தலைவர் லட்சுமி நாராயணன், பொதுக்குழு உறுப்பினர் வயலூர் ராமநாதன், விவசாய அணி ஜேம்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி