கல்லூரி மாணவிகள் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு

77பார்த்தது
கல்லூரி மாணவிகள் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு
தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் (தன் னாட்சி) துறைசரர் சங்கங்களின் தொடக்கவிழா மற்றும் கல்லுாரி மாணவிகள் சங்க பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழாவும் நடந்தது. கல்லூரி செயலர் அருட்சகோதரி மரியம்மாள் வழிகாட்டுதலின்படி கல்லுாரி இயக்குனர் அருட்சகோதரி டெரன்சியாமேரி மற்றும் முதல்வர் காயத்ரி தலைமையில் நடந்தது. தஞ்சை மருத்துவ கல்லூரி முதுநிலை பொது மருத்துவ ஆராய்ச்சி இயக்குனர் பாலாஜிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகள் பயிலும் காலத்திலே தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்வதன் அவசியம் குறித்தும், உடல்நலம், மனநலம் குறித்தும் உளவியில் சார்ந்து கருத்துகளுடன் பேசினார். மாணவிகளின் தனித்திறன்கள், பல்வேறு பணிகளை ஒருங்கிணைக்கும் தன்மை துறைக்கும், கல்லுாரிக்கும் அவர்கள் தந்த ஒத்துழைப்பு ஆகியவற்றை அடிப்படைத் தகுதிகளாகக் கொண்டு மாணவிகள் தலைவி, துணைத்தலைவி உள்ளிட்ட 11பதவிகளுக்கான நேர்காணல் நடந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றிப் பெற்ற மாணவிகள் மற்றும் துறைசார் சங்கப் பொறுப்பாளர்கள் அனைவரும் முதல்வர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். கல்லுாரி முதல்வர் காயத்ரி வரவேற்றார். தாவரவியல் துறைத்தலைவர் கற்பகலெட்சுமி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி