தஞ்சாவூர் மாவட்ட
கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது பொதுமக்கள் இணையவழி வாயிலாக தற்போது பெற்று வரும் சேவைகனை விரைவாகவும் பல்வேறு துறைகள் மூலம் பெற்றுவரும் வெவ்வேறு சேவைகளை ஒரே இடத்திலும் பெறுவதற்கு தமிழக முதல்வரின் சீரிய வழிகாட்டுதலின்படி படி மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம் 1. 8. 2024 அன்று ஓரத்தநாடு வட்டாரத்தில் உள்ள பொய் யுண்டார் கோட்டை, வடக்கூர் தெற்கு, வடக்கூர் வடக்கு ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற உள்ளது.
மேலும் 8. 8. 2014 அன்று ஓரத்தநாடு வட்டாரத்தில் தெக்கூர் ஆயங்குடி, சோழபுரம், மண்டலக்கோட்டை சேதுராயன்குடிகாடு. கருக்காடிப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு தெக்கூர் பன்னோக்கு புயல் பாதுகாப்பு மையத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடை பெறவுள்ளது.
வருகிற 8. 8. 2024 அன்று பாச்சூர் மற்றும் ஆதனக்கோட்டை ஊராட்சிகளுக்கு நடைபெறவிருந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 18. 2024 அன்று பொய்யுண்டார் கோட்டை விநாயகா திருமண மஹாலில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளது.
எனவே. பாச்சூர் மற்றும் ஆதனக்கோட்டை ஊராட்சிகளுக்குட்பட்ட பொதுமக்கள் மேற்கண்ட 'மக்களுடன் முதல்வர்' முகாமில் கலந்துகொண்டு பயன் பெற மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக். கொண்டுள்ளார்.