பாஜக கூட்டணியை தோல்வியடையச் செய்த மக்களுக்கு சிஐடியு நன்றி

74பார்த்தது
பாஜக கூட்டணியை தோல்வியடையச் செய்த மக்களுக்கு சிஐடியு நன்றி
சிஐடியு தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு கூட்டம், தஞ்சாவூர் சரோஜ் நினைவகத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், சிஐடியு மாநிலத் தலைவருமான அ. சவுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் 
ஜி. சுகுமாரன், மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாநில துணைச் செயலாளர்கள் வி. குமார், கே. திருச்செல்வன்,  
எஸ். கண்ணன், கே. ஆறுமுகநயினார், தஞ்சை மாவட்டச் செயலாளர் சி. ஜெயபால், மாவட்டத் தலைவர் ம. கண்ணன், மாவட்டப் பொருளாளர் பி. என். பேர் நீதி ஆழ்வார் மாநிலக் குழு உறுப்பினர் என். பி. நாகேந்திரன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாடு - பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு தலைமை வகித்த, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு. க. ஸ்டாலினுக்கு, சிஐடியு தமிழ் மாநிலக் குழு மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.  
ஒன்றிய அரசின் மக்கள்,   தொழிலாளர், விவசாயிகள் விரோதக் கொள்கைகளை அமல்படுத்தியது பாஜக, மதவெறி பாஜக கூட்டணியை படுதோல்வி அடைய செய்த வாக்காளர்கள், உழைப்பாளி மக்களுக்கும், தேர்தல் பணியாற்றிய சிஐடியு தோழர்களுக்கும் சிஐடியு மாநிலக்குழு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி