நாஞ்சிக்கோட்டை சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

78பார்த்தது
நாஞ்சிக்கோட்டை சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை பட்டியில் அடைத்து அபராதம் விதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் இ. பிகாலனி உள்ளது. இந்த காலனியில் இருந்து புதிய
பேருந்து நிலையத்திற்கு ஒரு சாலை பிரிந்து செல்கிறது. இந்த சாலையை காந்திஜி நகர், சத்யா நகர். செந்த மிழ் நகர், ஆரோக்கிய நகர், ஜமால் உசேன் நகர், பார்வதி நகர் மற்றும் விளார். சொக்கலை, நடுவூர் கொல்லாங்கரை, சூரியம்பட்டி, வேங்கராயன் குடிக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் புதிய
பேருந்து நிலையம் செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பல்வேறு கல்வி நிலையங்கள் இயங்கி வருவதால் பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகளும் அதிக அளவில் வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த சாலையில் போக்குவரத்துக்கு இடையூதாக பல இடங்களில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என வாகன ஓட்டிகளும். பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி