வாலிபரை தாக்கி பணம் பறிப்பு - சிறுவன் உட்பட இருவர் கைது

3295பார்த்தது
வாலிபரை தாக்கி பணம் பறிப்பு - சிறுவன் உட்பட இருவர் கைது
தஞ்சை மாவட்டம்  ஆடுதுறையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் மணிபாரதி (வயது 24). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக தஞ்சை ரயில் நிலையத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, ரயில்வே குட் ஷெட் பகுதியில் வந்த போது திடீரென 3 பேர் மணிபாரதியை சுற்றி வளைத்து தாக்கி விட்டு அவரின் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ. 480 பறித்தனர்.

செல்போனை பறிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டதால் மணிபாரதி அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் அவரை பின்  தொடர்ந்து 3 நபர்களும் ஓடினர். இந்த நிலையில் மணிபாரதி அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தெற்கு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். காவல்துறையினரைக் கண்டதும் தப்பி ஓடிய 3 பேரையும், தெற்கு காவல் ஆய்வாளர்  ரமேஷ் மற்றும் காவலர்கள் விரட்டி சென்று சுற்றி வளைத்து பிடித்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தஞ்சை அண்ணாநகரை சேர்ந்த அப்துல் ரஹீம் (வயது 19), ஜெபமாலைபுரம் பகுதியை சேர்ந்த முகமது ரோஷன் (20) மற்றும் 18 வயதுடைய ஒரு சிறுவன் என்பதும் தெரியவந்தது. இது குறித்து மணிபாரதி கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி