அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் பால்குட வீதி உலா

70பார்த்தது
அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் பால்குட வீதி உலா
கும்பகோணம் அருகே சுவாமிமலை ஆற்றங்கரை தெருவில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு முத்து மாரியம்மன் கோவில் மூன்றாம் ஆண்டு கரக உற்சவ திருவிழா கடந்த 3ம் தேதி காப்பு கட்டுதளுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ முத்துமாரியம்மன் சக்தி கரகம் எடுத்து நையாண்டி மேள வாத்தியம் வான வேடிக்கையுடன் வீதி உலா காட்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காவிரி ஆற்றங்கரையில் இருந்து பால்குடம் எடுத்து வீதி உலா காட்சியும், மாலை சந்தன காப்பு அலங்காரமும் நடைபெற்றது. தொடர்ந்து இன்று கஞ்சி வார்த்தலும், மாலை மஞ்சள் நீர் விளையாட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை சுவாமிமலை ஆற்றங்கரை தெரு ஊர்வாசிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி