'டிக்டோ ஜாக்' கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை-அமைச்சர்

57பார்த்தது
'டிக்டோ ஜாக்' கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை-அமைச்சர்
'டிக்டோ ஜாக் அமைப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

தஞ்சாவூர் முனிசிபல் காலனி நீல
கிரி உயர்நிலைப் பள்ளியில் திங்கள் கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 'டிக்டோ ஜாக்' அமைப்பி னர் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் நிலை யில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
இதில் 5 அல்லது 6 கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வழி வகைகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும், அவர்களிடம் முதன்மைச் செயலரும் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார். அப்போது நிதி சார்ந்த கோரிக்கை கள், நிதி சாராத கோரிக்கைகள் என்னென்ன இருக்கின்றன என்பதை அறிந்து, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். ஆண்டுதோறும் வழங்கக்கூடிய இந்த நிதியை பல காரணங்களைக் கூறி ஏன் நிறுத்தப்பட்டது என்றும், ஏறத்தாழ
60 லட்சம் மாணவர்களை மனதில் வைத்து, உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தோம்.
இதில் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார்" என்றார் அமைச்சர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி