தஞ்சாவூருக்கு 42 வேன்களில் 2700 டன் புழுங்கல் அரிசி

83பார்த்தது
தஞ்சாவூருக்கு 42 வேன்களில் 2700 டன் புழுங்கல் அரிசி
ஆந்திராவிலிருந்து தஞ்சாவூருக்கு ரயில் மூலம் 42 வேகன்களில் 2700 டன் புழுங்கல் அரிசி நேற்று வந்தது. அவை 5 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு அரிசி வழங்குவதற்காக ஆந்திராவில் உள்ள அரிசி மத்திய சேமிப்புக் கிட்டங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக பொது விநியோகத் திட்டத்தில் பொது மக்களுக்கு வழங்கப்படும்.

இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மத்திய சேமிப்புக் கிடங்கிற்கும் அரிசி அனுப்பி வைக்கப்பட்டு அந்த அரிசி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
அதன்படி நேற்று ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் 2700 டன் புழுங்கல் அரிசி ரயில் மூலம் தஞ்சாவூர் வந்தது. 42 வேகன்களில் வந்த இந்த அரிசியை அங்கிருந்து லாரிகள் மூலம் தஞ்சாவூரில் உள்ள மத்திய சேமிப்புக் கிடங்கிற்கு எடுத்து சென்றனர்.
பின்னர் அங்கிருந்து 5 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி