பேராவூரணி: கிடேரிக் கன்றுகளுக்கு தடுப்பூசி முகாம்

69பார்த்தது
பேராவூரணி: கிடேரிக் கன்றுகளுக்கு தடுப்பூசி முகாம்
பேராவூரணி அருகே ஆவணம் கிராமத்தில் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கிடேரிக் கன்றுகளுக்கு கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.

தஞ்சாவூர் கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி துணை இயக்குனர் சுப்பையன், பட்டுக்கோட்டை கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர்(பொ) கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தஞ்சாவூர் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் கார்த்திகேயன் முகாமை தொடங்கி வைத்து, பேசியபோது, "தஞ்சாவூர் மாவட்டத்தில், 4 முதல் 8 மாத வயதுடைய கிடேரிக் கன்றுகளுக்கு கன்று வீச்சு நோய் (கருச்சிதைவு நோய்) தடுப்பூசி பணிகள் செப். 18 முதல் அக். 15 வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே, கன்று வீச்சு நோய் தடுப்பூசி பணிகள் 3 சுற்றுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 4 வது சுற்றுப்பணிகள் செப். 18 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.

4 முதல் 8 மாதங்கள்வரை உள்ள கிடேரிக்  கன்றுகள் கண்டறியப்பட்டு அவற்றிற்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டு காது வில்லைகள் பொருத்தப்பட்டு தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்படும். அனைத்து கால்நடை நிலையங்கள் மூலமாகவும், அந்தந்த நிலையங்களின் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள, தகுதி வாய்ந்த கிடேரிக் கன்றுகளுக்கு இத்தடுப்பூசி போடப்படும். கன்றுகளின் விவரங்கள் அனைத்தும் பாரத் பசு தான் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். கன்றுகளுக்கு தடுப்பூசி போட்டுப் பயன்பெற வேண்டும்" என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி