திகோ சில்க்ஸ் பாதுகாப்பு அங்கத்தினர்கள்கான பேரவை கூட்டம்

78பார்த்தது
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்காவில் அகில இந்திய அளவில், கைத்தறி பட்டுச்சேலை விற்பனையில் முதன்மை நிறுவனமாக திகழும் திருபுவனம் திகோ சில்க்ஸ் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு அங்கத்தினர்கள் பேரவை கூட்டம் பொறுப்பாளர் நாகேந்திரன், தலைமையில் கௌரி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் ஜீவபாரதி, சேகர், கோவிந்தன், மாதவன், உதயகுமார், ராம்குமார், சேது மற்றும் அங்கத்தினர்கள் ஏராளமான கலந்து கொண்டனர். பேரவை கூட்டத்தில் திகோ சிலக்ஸில் ஆண்டிற்கு 200 கோடிக்கு மேல் வரவு செலவு நடைபெறும் திகோ சில்க்ஸில் மேலாண்மை இயக்குனரை நியமனம் செய் 100 கோடிக்கு மேல் பட்டுப்புடவை இருப்பு தேக்கம் உள்ளது வெயிட் பணியை அதிகரிக்க 20 சதவீதம் அரசு ரிபேட் நிம்மதனையின்றி வழங்கிட வேண்டும் மூலப் பொருள்களான பட்டிற்கு 25 சதவீதம் ஜரிகைக்கு 5% தமிழக அரசு மானியம் வழங்கிட வேண்டும் கோ ஆப்டெக்ஸ் மூலம் பட்டுப்புடவை கொள்முதல் அதிகப்படுத்து ஜிஎஸ்டி வரியை முற்றிலும் நீக்கு கைத்தறி நக ஒதுக்கீட்டை உறுதியாக அமல்படுத்து அங்கத்தினர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஐசிஐசிஐ லம்பார்டு திட்டத்தின் படி உள்நோயாளிகளுக்கு ரூபாய் 7500/ ம் வெளி நோயாளிகளுக்கு ரூபாய் 7500 வழங்கி வந்தது போல் மருத்துவ காப்பீடு திட்டத்தை அமுலாக்கி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன..

தொடர்புடைய செய்தி