பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி, தூய்மைப் பணிகள் நடைபெற்றது.
மருத்துவமனை வளாகத்தில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் 200-க்கும் மேற்பட்ட மூலிகை மற்றும் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டது.
நிகழ்ச்சியில், தலைமை மருத்துவர் மீனா நியூட்டன் தலைமை வகித்தார். மருத்துவர்கள் பி. சீனிவாசன், எம். சரவணன், எஸ். கார்த்திகேயன், ஜி. சுமதி செவிலியர் கண்காணிப்பாளர் எஸ். தேவகி, செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
அனைத்து வார்டுகளுக்கும் ஊர்வலமாகச் சென்று, 'மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்' என முழக்கங்கள் எழுப்பப்பட்டு, விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது ஏற்பாடுகளை விதை அறக்கட்டளை சக்திகாந்த் செய்திருந்தார்