தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

51பார்த்தது
தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -

தென்னையில் ரூகோஸ், சுருள் வெள்ளை ஈ தாக்குதல் காணப்படுகிறது. தென்னை ஓலையில் வெள்ளை ஈக்கள் பெற 50 முதல் 65 முட்டைகளை சுருள் வடிவில் இடுகின்றன. இந்த முட்டைகள் 4 முதல் 7 நாட்களில் குஞ்சு பொரித்து, ஓலையில் சாறு உறிஞ்சத் தொடங்குகின்றன. வளர்ச்சியடைந்த நிலையில், பறக்கத் தொடங்கி, அருகில் உள்ள மரங்கள், தோப்புகளுக்கு பரவுகின்றன.
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, ஏக்கருக்கு இரண்டு விளக்கு பொறிகளை இரவு 7 முதல் 11 மணி வரை எரிய விட்டு, கவர்ந்து அழிக்கலாம். ஏக்கருக்கு 10 மஞ்சள் ஒட்டு பொறிகளை, நிலத்தில் இருந்து 5 அடி உயரத்தில் கட்டலாம். அல்லது, மரத்தின் தண்டுப் பகுதியில் சுற்றி விடலாம். பாதிப்புள்ள  மரங்களின் ஓலைகள் மீது தண்ணீரை விசைத் தெளிப்பான் வாயிலாக அதிக அழுத்தத்துடன் பீய்ச்சி அடித்து, வெள்ளை ஈக்கள் மற்றும் முட்டைகளை அழிக்கலாம்.  
உயிரியல் முறையில் கட்டுப்படுத்த, கிரைசோபெர்லா உள்ள ஓட்டுண்ணிகள் ஏக்கருக்கு, 500 எண்ணிக்கையில் ஓலைகளின் அடிப்பகுதியில் கட்டினால், வெள்ளை ஈக்களின் புழுக்களை உட்கொண்டு அழிக்கலாம்.  
காக்ஸினெல்லிட்
பொறிவண்டு மற்றும் என்கார்சியா ஒட்டுண்ணிகளை ஓலையில் வைத்தால் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி