தூய்மை பணியாளர்களுடன் புத்தாண்டு கொண்டாடிய அரசுமருத்துவர்கள்

72பார்த்தது
பட்டுக்கோட்டையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு துப்புரவு பணியாளர்கள், செக்யூரிட்டி காவலர்களை நேரில் அழைத்து சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி அவர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் செக்யூரிட்டி காவலர்கள் இரவு பகல் என மருத்துவமனையை தூய்மைப்படுத்திவருவதிலும், வாகனங்களை ஒழுங்குபடுத்துவதிலும் மருத்துவமனையில் தங்கி உள்ள நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதிலும் ஆர்வம் காட்டி பணி செய்து வரும் நிலையில் அவர்களை கௌரவிக்கும் விதமாக ஆங்கில புத்தாண்டான இன்று மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் செக்யூரிட்டி காவலர்கள் ஆகியோரை தலைமை மருத்துவர் அன்பழகன் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் சீனிவாசன் உள்ளிட்ட மருத்துவர்கள் நேரில் வரவழைத்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து இனிப்புகள் வழங்கி அவர்களுடன் புத்தாண்டை கொண்டாடினர். மருத்துவர்கள் தங்களுக்கு மரியாதை செலுத்தி தங்களுடன் புத்தாண்டு கொண்டாடிய நிகழ்வை எண்ணி துப்புரவு பணியாளர்கள் மற்றும் செக்யூரிட்டி காவலர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

டேக்ஸ் :