பட்டுக்கோட்டை அருகே
ஆலடிக்குமுளை சமத்துவபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. ஆர்டிஓ ஜெயஸ்ரீ தலைமை வகித்தார். எம்எல்ஏஅண்ணாதுரை பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். தாசில்தார் சுகுமார், ஊராட்சி தலைவர்கள் சூர்யா, மேனகா, லதாஜெனிட்டா, செம்பாளூர் ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வைத்தனர். முகாமில் மின் இணைப்பு, மின் கட்டண மாற்றம், பட்டா பெயர் மாற்றம், வருமானச் சான்று, ஜாதி சான்று, வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகளை மக்கள் மனுவாக கொடுத்தனர். ஊராட்சி ஒன்றிய தலைவர் பழனிவேல், பிடிஓக்கள் கோவிந்தராஜ், வீரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.