விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தொல். திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றனர். அதே போல தமிழ்நாட்டில் 3-வது மாநில கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது. இதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பில் நேற்று பட்டுக்கோட்டையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்குமாவட்ட செயலாளர் அரவிந்த குமார் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் சதா. சிவகுமார், நாடாளுமன்றதொகுதி
செயலாளர் இளந்தென்றல், கருத்தியல் பரப்பு துணை செயலாளர் மோட்ச. குணவழகன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் கோட்டை
அரசமாணிக்கம், கராத்தே. தமிழ்ச்செல்வன், பரமேஸ்வரி உஞ்சை அரசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் வெற்றிச்செல்வன், சட்டசபை தொகுதி செயலாளர் சக்கரவர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப் பட்டது.