கிழக்கு கடற்கரை சாலையில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

58பார்த்தது
கிழக்கு கடற்கரை சாலையில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்
கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டை வடகாடு தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி வரை இடைப்பட்ட தஞ்சை மாவட்ட பகுதிகளில், கிழக்கு கடற்கரை சாலைகளில் ஏராளமான கால்நடைகள் பராமரிப்பின்றி சுற்றி திரிகின்றன.

இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டி உள்ளது. அப்படி இருந்தும் மாடுகள் திடீர் திடீரென வாகனங்களின் குறுக்கே புகுந்து விடுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதன் காரணமாக உயிரிழப்பு அபாயம் உள்ளது. கால்நடைகளை வளர்ப்போர் அவற்றை வீடுகளில் கட்டி போடாமல் சாலையில் அவிழ்த்து விடுவது விபத்துக்கு காரணம் எனப்படுகிறது.

மேலும் இரவு நேரங்களில் சாலையில் கால்நடைகள் படுத்து கிடக்கின்றன. பலமுறை எச்சரிக்கை விடுத்தும் கேட்காத நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கால்நடைகளை பிடித்து கொட்டகையில் அடைத்து வைத்தனர். தற்போது மீண்டும் சாலையில் அவிழ்த்து விடுகின்றனர். எனவே அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை ராஜாமடம் பகுதிகளில் அவிழ்த்து விடப்பட்டுள்ள காளை மாடுகளை பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி