விவசாயப் பணிக்கு தஞ்சாவூர் வந்த 1275 மெ. டன் யூரியா உரம்

60பார்த்தது
விவசாயப் பணிக்கு தஞ்சாவூர் வந்த 1275 மெ. டன் யூரியா உரம்
தட்டுப்பாடின்றி சம்பா சாகுபடி செழிக்க 1275 மெட்ரிக் டன் உரம் தஞ்சாவூர் வந்தடைந்தது என்று வேளாண்மை இணை இயக்குனர் ( சுஜாதா தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறியிருப்பதாவது தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்பொழுது நெல் சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்
மேலும் உளுந்து, எள், நிலக்கடலை உள்ளிட்ட இதரப்பயிர் சாகுபடியிலும் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தற்போது தஞ்சாவூருக்கு சரக்கு ரயிலில் 1275 மெ. டன் யூரியா உரம் நேற்று வந்தடைந்துள்ளது.

பின்னர், லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு பயிர்களுக்கு தேவையான உரங்களான யூரியா 10, 573 மெ. டன்,
டி ஏ பி 3782 மெ. டன், பொட்டாஷ் 1, 808 மெ. டன், காம்ப்ளக்ஸ் 7032 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 1568 மெட்ரிக் டன் ஆகியவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் தனியார் சில்லறை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேளாண் துறை அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி